மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா ரத்து

திருப்பணிகள் நடைபெற்று வருவதால் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் இந்தாண்டு ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பணிகள் நடைபெற்று வருவதால் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் இந்தாண்டு ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குள்பட்ட இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, ஆடி மாதங்களில் தொடர்ந்து 10 நாள்கள் திருவிழா நடைபெறும். அப்போது அம்மனும், சுவாமியும் மண்டகப்படிகளில் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெறும். தற்போது இக்கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. இதனால் ஆனந்தவல்லி அம்மன் மூலவருக்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. 
இதன்காரணமாக இந்தாண்டு இக்கோயிலில் ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து மண்டகப்படிதாரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com