அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர வரும் ஜூலை 25-இல் மீண்டும் கலந்தாய்வு

சிவகங்கை மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவ, மாணவிகளுக்கு ஜூலை 25-இல் மீண்டும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.  

சிவகங்கை மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவ, மாணவிகளுக்கு ஜூலை 25-இல் மீண்டும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.  
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எல்.தர்மராஜ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவிபெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 4-ம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. 
இந்நிலையில், தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையர் உத்தரவின்படி, காலியாக உள்ள இடங்களுக்கு மாவட்ட கலந்தாய்வின்போது வருகை தராத விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில் வரும் ஜூலை 25-ம் தேதி காலை 8 மணி முதல் மீண்டும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.      சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ள இக்கலந்தாய்வில் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தங்களது கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல், ஜாதிச் சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5, சேர்க்கை கட்டணம் ரூ.185 அல்லது ரூ.195 கொண்டு வர வேண்டும். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவிகள், காலணிகள், இலவச பேருந்து பயண அட்டை ஆகியவற்றுடன் மாதம் ரூ.500  உதவித்தொகை வழங்கப்படும்.
 மேலும் இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு 04575- 292494 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com