காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் மாசி-பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி - பங்குனித் திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி - பங்குனித் திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கொடியேற்ற நிகழ்வில், கோயில் செயல் அலுவலர் அ.கா. அகிலாண்டேஸ்வர், விழாக்குழுவினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் காரைக்குடி வட்டார யாதவ சமுதாயத்தினரின் சார்பில் நடைபெற்ற மண்டகப்படி நிகழ்ச்சியில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் மார்ச் 20 ஆம் தேதி  இரவு திருக்கோயில் கரகம், மதுக்குடம், முளைப்பாரி எடுத்து வருவதலும், மார்ச் 21 ஆம் தேதி காலையில் காவடி, பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்துதலும், பக்தர்களின் பால்குடம், காவடி, பூக்குழி, அக்னிச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக் கடன் செலுத்துதலும் நடைபெறுகிறது. அன்று மாலை திருக்கோயில் கரகம், மதுக்குடம், முளைப்பாரி கோயிலிலிருந்து புறப்பட்டு பருப்பூரணிக்கு ஊர்வலமாகச் சென்று அங்கு கங்கையில் விடுதல் நிகழ்ச்சியும், அன்று இரவு காப்புப்பெருக்குதலும் நடைபெறும். மார்ச் 22 ஆம் தேதி இரவு அம்மன் திருவீதியுலாவும், மார்ச் 23 ஆம் தேதி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறும்.
விழாவையொட்டி நாள்தோறும் வெவ்வேறு சமூகத்தினரின் சார்பில் மண்டகப்படி நடைபெறுகிறது. இதில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும், அன்று இரவு கலை நிகழ்ச்சிகளும் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com