திருப்பத்தூர், திருவாடானையில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்தில் 6 குறுவள மையத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்தில் 6 குறுவள மையத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 102 அரசுப் பள்ளிகளுக்கு ஒரு பள்ளிக்கு 6 பேர் வீதம் பயிற்சியளிக்கப்பட்டது. திருக்கோஷ்டியூர், திருப்பத்தூர், புதுப்பட்டி மற்றும் 11 ஆவது வார்டு பள்ளி காரையூர், கண்டவராயன்பட்டி, இளையாத்தங்குடி ஆகிய மையங்களில் இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. 
பயிற்சியை திருப்பத்தூர்  கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர் சாந்தி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜான்சார்லஸ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயலலிதா ஆகியோர் மேற்பார்வையிட்டனர். இதில் பள்ளியின் வளர்ச்சித் திட்டம், கல்வித்திறன் ஊக்குவித்தல், பெற்றோர்களின் பங்கு ஆகியவை குறித்து 
விளக்கப்பட்டது.
திருவாடானையில்... திருவாடானை பகுதியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் குறுவள மைய அளவிலான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.திருவாடானை, தொண்டி கிழக்கு, மேற்கு ,கருமொழி மங்கலக்குடி ஆகிய குறுவள  மையத்தில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு வள மையத்திலும் சுமார் 10 முதல் 15 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கிராமக் கல்வி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் தலைமையிலும்,திருவாடானையில் 
வட்டார வள மையத்திலும் ஆசிரியர் பயிற்றுனர் நாகரெத்தினம் தலைமையிலும், கருமொழி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் காஞ்சனா தலைமையிலும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com