குன்றக்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா: இன்று கொடியற்றத்துடன் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா புதன்கிழமை (மார்ச் 21) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா புதன்கிழமை (மார்ச் 21) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
       குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா புதன்கிழமை அதிகாலை 5 மணி முதல் 5.45 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி ஆகியன நடைபெற்றன.வெள்ளிக் கேடகத்தில் சுவாமி திருவீதியுலா புதன்கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.     ஞாயிற்றுக்கிழமை மாலையில் வள்ளி நாயகி திருமணம், அன்று இரவு பூப்பல்லக்கும், மார்ச் 27 ஆம் தேதி இரவு தங்க ரத உலாவும் நடைபெறுகிறது. 8-ஆம் நாள் திருவிழாவான மார்ச் 28 ஆம் தேதி வையாபுரிகுளத்தில் தெப்பமும், வெள்ளி ரதத்தில் சுவாமியின் திருவீதி உலாவும் நடைபெறும். 
   9-ஆம் நாள் திருவிழாவான மார்ச் 29 ஆம் தேதி மாலை 4.15 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது.     மார்ச் 30 பங்குனி உத்திரத்தன்று தீர்த்த விழாவும், மயிலாடும்பாறைக்கு சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்று, திருவிழா நிறைவுபெறுகிறது.   
  விழா ஏற்பாடுகளை, குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத் தலைவர் பொன்னம்பல அடிகளார் மேற்பார்வையில், திருமடத்தினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com