தூய்மை இந்தியா விழிப்புணர்வு பிரசாரம்: பைக்கை பல்லால் கடித்து இழுத்த 3 வயது சிறுவன்

தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காளையார்கோவிலில் சனிக்கிழமை மூன்று வயது சிறுவன் 230 கிலோ எடையுள்ள இரு சக்கர வாகனத்தை கயிறு கட்டி பல்லால்

தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காளையார்கோவிலில் சனிக்கிழமை மூன்று வயது சிறுவன் 230 கிலோ எடையுள்ள இரு சக்கர வாகனத்தை கயிறு கட்டி பல்லால் இழுத்தார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே யுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்த ஜான்பீட்டர்-சுதா ஆகியோரின் மகன் லெவேத தியோடர்(3).இவர்,தியானம் மற்றும் யோகா பயிற்சி வகுப்பில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில்,காளையார்கோவிலில் உள்ள பெருமாள் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 230 கிலோ எடையுள்ள இரு சக்கர வாகனத்தை லெவேத தியோடர் தனது பல்லால் கடித்து 50 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றார்.
இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் பாலா,சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் நிறுவனர் சுரேஷ்குமார்,மருத்துவர் முஸ்தபா நயினார்,முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அருள்ராஜ் உள்ளிட்ட பலரும் சிறுவனின் முயற்சியை பாராட்டினர். நிகழ்விற்கான ஏற்பாட்டினை திருக்கானப்பேர் அமைப்பின் நிறுவனர் அமுதசுரபி செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com