இளையான்குடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட டெங்கு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை ஆட்சியர் ஜெயகாந்தன்ஆய்வு செய்தார்.
      இளையான்குடி பேரூராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை இணைந்து, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 
    இதையொட்டி, இளையான்குடி வந்த மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், பூச்சியேந்தல் பகுதியில் கொசுமருந்து அடிக்கும் பணி, மேல்நிலைத் தொட்டி சுத்தம் செய்யும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு, அந்தந்தப் பகுதி மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். 
    அதன்பின்னர், வீடுகளில் குடிநீர்த் தொட்டிகளை ஆய்வு செய்து, அவற்றை சுத்தமாக பராமரிக்குமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தினார். பின்னர், சோதுகுடி, புறவழிச்சாலையில் உள்ள ஊருணிகள் மற்றும் வரத்துக் கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணியை பார்வையிட்டார்.     இளையான்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்ற ஆட்சியர், அங்கு சிகிச்சைப் பெற காத்திருந்த நோயாளிகளிடம் டெங்கு, பன்றிக் காய்ச்சல் குறித்தும், அவற்றை தடுக்க பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். 
    மாவட்ட பூச்சியல் வல்லுநர் ரமேஷ், பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், சாலைக்கிராமம் வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன் கை கழுவும் முறை குறித்தும் ஆட்சியரிடம் விளக்கிக் கூறினர்.  
  இந்த ஆய்வின்போது, இளையான்குடி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் மணிகண்டன், இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகுமீனாள், அன்புதுரை, அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பாலமுருகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com