சிவகங்கையில் காவலர் நினைவு தினம்

சிவகங்கையில் காவலர் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சிவகங்கையில் காவலர் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சிவகங்கையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் தலைமை வகித்து, வீர மரணமடைந்த காவலர்கள் நினைவாக அமைக்கப்பட்ட தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது வான் நோக்கி 21 குண்டுகள் முழங்கப்பட்டது.
இதில், கூடுதல் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் ஏராளமனோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.மேலும்,வீர மரணமடைந்த காவல் சார்பு ஆய்வாளர் ஆல்வின் சுதனின் தந்தை தவசிபால் மற்றும் ராணுவத்தில் வீர மரணமடைந்த இளையராஜாவின் மனைவி செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் கெளரவித்தார்.    
இலுப்பகுடியில் உள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் காவலர் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வீர மரணமடைந்த மத்தியப் படை காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பயிற்சி மைய வளாகத்தில் அமைக்கப்பட்ட வீரர்களின் நினைவு தூபிக்கு இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி மைய கமாண்டர் ஜஸ்டின் ராபர்ட் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதில்,இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத் துணை கமாண்டர் ,பயிற்சி மைய வீரர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com