மா.ஆலம்பட்டி அரசுப் பள்ளிக்கு தேசிய தூய்மைப் பள்ளி விருது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மா.ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, தூய்மைக்காக

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மா.ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, தூய்மைக்காக "ஸ்வச்ச வித்யாலாயா புரஸ்கார்' என்ற தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
 இப்பள்ளி மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் புதுமைப் பள்ளிக்கான விருதினை பெற்றுள்ள நிலையில் தற்போது ஸ்வச்ச வித்யாலாயா புரஸ்கார் விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
வரும்  செவ்வாய்க்கிழமை (செப். 18) தில்லியில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ்ஜாவடேகர் இவ்விருதை வழங்குகிறார். கடந்த மாதம் 5 ஆம் தேதி மாநில புதுமைப் பள்ளி விருது கல்வி அமைச்சர் செங்கோட்டையனால் இப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.
 இதுகுறித்து மாநில அளவில் நல்லாசிரியர் விருது பெற்றவரும், இப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான ஸ்ரீதர்ராவ் கூறியது: மா.ஆலம்பட்டி நடுநிலைப்பள்ளியானது, இங்கு படிக்கும் மாணவர்களின் திறமையால் பல விருதுகளைப் பெற்றுள்ளது. தற்போது மாநில மற்றும் மத்திய அரசுகளின் புதுமை மற்றும் தூய்மைப் பள்ளிக்கான விருதினையும் பெற்றமைக்குப் பள்ளி மாணவர்களே முழு முதல் காரணம். இப்பள்ளி சுகாதாரம், குடிநீர், கழிப்பறை, சுற்றுச்சூழல் மற்றும் மூலிகைத் தோட்டம் கொண்ட பள்ளியாகும் என்றார். இவ்விருது பெற்றதற்காக மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கிராமப் பெரியவர்கள் அனைவரும் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர்ராவைப் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com