காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

காரைக்குடி அழகப்பச்செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா முருகப்பா கலையரங்கில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.


காரைக்குடி அழகப்பச்செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா முருகப்பா கலையரங்கில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவில் கல்லூரியின் முதல்வர் ஏ. இளங்கோ தலைமை வகித்து ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். சென்னை ஐ.ஐ.டி இயந்திரவியல்துறை பேராசிரியர் ஏ. ரமேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இளங்கலை பொறியியல் மாணவ, மாணவிகள் 328 பேருக்கும், முதுகலை பொறியியல் மாணவ, மாணவிகள் 121 பேருக்கும் பட்டங்களை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து அவர் பேசியது: இன்றைய சூழலில் மாணவர்கள் கல்லூரிப் படிப்பு மட்டும் பெற்றுவிட்டால் போதுமானதல்ல. உயர்கல்வியில் அனைத்து விபரங்களையும் அறிந்திருப்பதும் அவசியம். எனவே மாணவர்கள் கூடுதலாக அனைத்தையும் தெரிந்துகொண்டு தங்களுக்கென ஒரு இலக்கு நிர்ணயித்து செயல்படவேண்டும் என்றார். விழாவில் கல்லூரி துணை முதல்வர் கணேசன், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com