உத்தமபாளையம் பகுதியில் தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்

உத்தமபாளையம் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உத்தமபாளையம் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மாதம் காலதாமதமாக முதல் போக நெற்பயிர் விவசாயம் தொடங்கியது. மேலும் இங்குள்ள சுமார் 3000 ஏக்கருக்கு மேல் நடவு பணி நிறைவு பெற்று களை எடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இதனிடையே இப்பகுதிக்கு முக்கிய பாசன நீராதாரமாக உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113 அடியாக குறைந்து விட்டது.

அணையில் நீர்வரத்தும் வெகுமாக குறைந்து விட்டதால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக பாசனக் கால்வாய்களில் தண்ணீர் செல்லாததால் இப்பகுதிகளில் நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன.
கை கொடுக்காத பருவமழை: தென் மேற்கு பருவமழை பொய்த்து விட்ட நிலையில் வடகிழக்கு பருவமழையை நம்பியே 4,707 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயப் பணிகள் தீவிரமாக நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் திருப்தியாக இல்லாததாலும், எதிர்பார்த்த பருவமழை பெய்யாததாலும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

 இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, மழைக் காலங்களில் அணையின் முழுக் கொள்ளவான 152 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க முயற்சி எடுக்க வேண்டும். தற்போது தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com