ஆண்டிபட்டி அருகே மருத்துவக் கழிவுகளால் விளைநிலங்கள் பாதிப்பு

ஆண்டிபட்டி அருகே, பாதுகாப்பற்ற முறையில் கொட்டப்படும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஆண்டிபட்டி அருகே, பாதுகாப்பற்ற முறையில் கொட்டப்படும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை மற்றும் மருத்துவக் கழிவுகள், 3 கி.மீ. தூரத்தில் உள்ள எம்.சுப்புலாபுரம், திருமலாபுரம், அமச்சியாபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கொட்டப்படுகின்றன. டிராக்டர்கள் மூலம் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்படும் இவை சாலை நெடுகிலும் சிதறி விழுகின்றன. மேலும் கண்ணாடி பாட்டில் மற்றும் ஊசி சிரிஞ்சுகள் சாலையில் நடந்து செல்வோரின் கால்களிலும், கால்நடைகளின் மீதும் குத்தி காயத்தை ஏற்படுத்துகின்றன. அத்துடன் அமச்சியாபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திறந்த வெளியில் கொட்டப்படும் இவற்றால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com