குச்சனூர் சனீஸ்வரர் கோயிலை மேம்படுத்த ரூ.1.18 கோடி நிதி ஒதுக்கீடு: திருத்தொண்டர்கள் சபை மாநிலத் தலைவர் ஆய்வு

தேனி மாவட்டம், குச்சனூர் சனீஸ்வரர் கோயிலை மேம்படுத்துவதற்காக ரூ. 1.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து,

தேனி மாவட்டம், குச்சனூர் சனீஸ்வரர் கோயிலை மேம்படுத்துவதற்காக ரூ. 1.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து, இக்கோயிலை திருத்தொண்டர்கள் சபை மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
குச்சனூர் அருள்மிகு சனீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சுரபி நதிக் கரையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆனால், இக்கோயிலில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, உடை மாற்றும் அறை உள்ளிட்ட எதுவும் முறையாக இல்லை. மேலும், தங்கும் விடுதி, வாகனம் நிறுத்துமிடம் இல்லாததால், வெளியூர் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், திருத்தொண்டர்கள் சபை மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, பேரூராட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கால்வாய், நெடுஞ்சாலை, கோயில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து, அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்றார்.
பின்னர், உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சுற்றுலாத் துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.1.18 கோடி நிதியை பேரூராட்சி நிர்வாகம் மூலம் கோயில் படித்துறை மற்றும் பக்தர்களுக்கு தங்கும் விடுதியை முதற்கட்டப் பணிகளாக மேற்கொண்டு, அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில், கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி நிர்வாகம் அலுவலர் பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com