தேனி மாவட்டத்தில் திறந்தவெளி கழிப்பிட பயன்பாட்டை தவிர்க்க கெடு: ஆட்சியர்

தேனி மாவட்டத்துக்குள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிட பயன்பாட்டை முழுமையாக தவிர்க்க வரும் நவம்பர் மாதம் வரை ஊரக

தேனி மாவட்டத்துக்குள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிட பயன்பாட்டை முழுமையாக தவிர்க்க வரும் நவம்பர் மாதம் வரை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் ந.வெங்கடாசலம் கெடு விதித்துள்ளார்.
தேனியில் வெள்ளிக்கிழமை ஊரக வளர்ச்சித் துறை தேனி சுகாதார இயக்கம் ஆகியவற்றின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற திறந்தவெளி கழிப்பிடத்தை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடக்கி வைத்து அவர் பேசியதாவது: வீடுகளில் கழிப்பறை கட்ட  அரசு சார்பில் ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
தனிநபர் இல்லக் கழிப்பறை கட்ட வாய்ப்பு இல்லாத இடங்களில் பொதுக் கழிப்பறை கட்டித் தரப்பட்டு வருகிறது.
 மாவட்டத்தில் தேனி,  சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்திற்குள்ளும்,  போடி,  உத்தமபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள்ளும், கம்பம், பெரியகுளம், க.மயிலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் வரும் நவம்பர் மாதத்திற்குள்ளும் திறந்தவெளி கழிப்பிட பயன்பாட்டை முழுமையாக தவிர்த்து, திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டம் என்ற நிலையை உருவாக்க ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com