ஒட்டன்சத்திரத்தில் 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை

ஒட்டன்சத்திரத்தில் 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரத்தில் 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஒட்டன்சத்திரத்தில் திருட்டு, வழிப்பறி, வாகன விபத்துக்களை கண்காணிக்க முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், முக்கிய வர்த்தக நிறுவனங்கள் முன்பு, நகரில் உள்ள தெருங்கள் உள்ளிட்ட 50 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
வர்த்தகர் சங்கத் தலைவர் சுப்பிரமணி, காய்கறி சங்கத்தலைவர் தங்கவேல், தயிர் மார்க்கெட் சங்கத் தலைவர் அருணாச்சலம் மற்றும் சுழற்சங்கத்தினர், அரிமா சங்கத்தினர், பெட்ரோல் நிலையம் வைத்திருப்பவர்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் என 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் போலீஸாரும் சேர்ந்து கேமராக்கள் பொருந்தும் பணியில் ஈடுபடுவார்கள். இப்பணிகள் இன்னும் ஒரு மாதத்துக்குள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com