கம்பம்மெட்டு காவல் சோதனை சாவடிக்கு அனுமதியின்றி மின் இணைப்பு: கேரளா கண்டித்ததால் மாற்று ஏற்பாடு

தேனி மாவட்டம், கம்பம்மெட்டு தமிழக எல்லையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல்துறை சோதனைச் சாவடிக்கு அனுமதியின்றி மின் இணைப்பு கொடுக்கப்பட்டதை கேரள மின் வாரிய அதிகாரிகள் கண்டித்ததால்,

தேனி மாவட்டம், கம்பம்மெட்டு தமிழக எல்லையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல்துறை சோதனைச் சாவடிக்கு அனுமதியின்றி மின் இணைப்பு கொடுக்கப்பட்டதை கேரள மின் வாரிய அதிகாரிகள் கண்டித்ததால், அங்கு மின் வசதிக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கம்பம்மெட்டு, தமிழக எல்லையில் தேனி மாவட்ட காவல் துறை சார்பில் சோதனைச் சாவடி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கம்பம்மெட்டு தமிழக எல்லையில் வனத்துறை சோதனைச் சாவடிக்கு எதிரே மாவட்ட காவல் துறை சார்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.
இந்த சோதனைச் சாவடி கடந்த ஆக. 4-ஆம் தேதி போலீஸாரால் திறக்கப்பட்டு கம்பம் வடக்கு காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கம்பம்மெட்டு தமிழக எல்லையில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்து, புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் சோதனைச் சாவடிக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தேனி மாவட்ட வனத்துறை சோதனைச் சாவடிக்கு, கேரள மின் வாரியம் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து முறையாக அனுமதி பெறாமல் புதிய காவல் சோதனைச் சாவடிக்கு மின் இணைப்பு ஏற்படுத்திக் கொண்டதை கேரள மின் வாரிய அதிகாரிகள் கண்டித்தனர். இதையடுத்து, புதிய காவல் சோதனைச் சாவடிக்குச் செல்லும் மின் வயர் இணைப்பை போலீஸார் துண்டித்துக் கொண்டனர். தற்போது இங்கு சூரிய சக்தி மின் பல்பு பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, இந்த காவல் சோதனைச் சாவடிக்கு, வனத் துறை அனுமதி வழங்காமல் காலதாமதம் செய்து வருவதால் இது போன்ற சிக்கல்கள் ஏற்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com