போடி காவலர் குடியிருப்பில்இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு

போடியில் வியாழக்கிழமை காவலர் குடியிருப்பில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.

போடியில் வியாழக்கிழமை காவலர் குடியிருப்பில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.
விழாவுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தலைமை வகித்தார். திண்டுக்கல் சரக காவல் துணைத் தலைவர் க.கார்த்திகேயன் புதிய விளையாட்டு அரங்கம் மற்றும் கல்வெட்டினை திறந்து வைத்து, விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தார்.
முதல் கட்டமாக தேனி மாவட்ட காவல்துறையை சேர்ந்த 12 அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதிப் போட்டியில் இரட்டையர் பிரிவில் போடி டி.எஸ்.பி. பிரபாகரன், மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் பாலகுரு ஆகியோர் போடி அணியாகவும், தேனி மாவட்ட ஆயுதப்படை சார்பு ஆய்வாளர்கள் சீமான், கனகசபாபதி ஆகியோர் தேனி அணியாகவும் மோதினர்.
இதில் 11-க்கு 14, 14-க்கு 11, 14-க்கு 7 என்ற புள்ளிக் கணக்கில் தேனி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு டி.ஐ.ஜி. க.கார்த்திகேயன் கோப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பழனிவேல், சுருளிராஜ், ஜ.கா.நி. பள்ளிகளின் தலைவர் வடமலைராஜையபாண்டியன், காவல் ஆய்வாளர்கள் போடி நகர் பா.சேகர், போடி புறநகர் வெங்கடாலசலபதி, சின்னமனூர் இம்மானுவேல் ராஜ்குமார் மற்றும் இறகு பந்து விûளையாட்டு வீரர்கள், காவல்துறையினர், அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர். போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜலிங்கம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com