யானைத் தந்தம் வைத்திருந்தவர் கைது

மதுரையில் வெள்ளிக்கிழமை யானைத் தந்தம் மற்றும் சிறுத்தையின் உடல் உறுப்புகளை விற்பனைக்கு எடுத்துச் சென்ற வருசநாட்டைச் சேர்ந்தவரை கண்டமனூர் வனத்துறையினர் கைது செய்தனர்.

மதுரையில் வெள்ளிக்கிழமை யானைத் தந்தம் மற்றும் சிறுத்தையின் உடல் உறுப்புகளை விற்பனைக்கு எடுத்துச் சென்ற வருசநாட்டைச் சேர்ந்தவரை கண்டமனூர் வனத்துறையினர் கைது செய்தனர்.
வருசநாடு அருகே உள்ள கோம்பைத் தொழுவைச் சேர்ந்தவர் சசிக்குமார் (38). இவர் சிறிய அளவிலான யானைத் தந்தம் மற்றும் சிறுத்தையின் தலை, நகம் மற்றும் எலும்புகளை விற்பனைக்காக மதுரைக்கு எடுத்து சென்றார்.
இதனையறிந்த வனத்துறையினர் மதுரை ஆரப்பாளையத்தில் அவரை வெள்ளிக்கிழமை கைது செய்து, கண்டமனூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், அரண்மணைப்புதூரை சேர்ந்த ஜீவா மற்றும் மஞ்சனூத்தை சேர்ந்த பூமிநாதன் ஆகியோரிடம் இவற்றை வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கண்டமனூர் வனத்துறையினர் வழக்குப் பதிந்து சசிக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ஜீவா மற்றும் பூமிநாதனை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து கண்டமனூர் வனச்சரகர் குமரேசன் கூறும் போது, பறிமுதல் செய்யப்பட்ட சிறிய யானை தந்தம் மற்றும் சிறுத்தையின் நகங்கள் மற்றும் பாகங்கள் 2 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனை விற்பனை செய்தவர்களை பிடித்த பின்னரே முழுவிவரமும் தெரியவரும். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வன விலங்குகளின் பாகங்கள் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஐதராபாத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com