தேக்கடி ஏரியில் சுற்றுலா படகை இயக்க துறைமுக அதிகாரிகள் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்துள்ளதால், தேக்கடி ஏரியில் சுற்றுலாத்துறை படகை தொடர்ந்து இயக்கலாமா என துறைமுகத் துறை அதிகாரிகள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்துள்ளதால், தேக்கடி ஏரியில் சுற்றுலாத்துறை படகை தொடர்ந்து இயக்கலாமா என துறைமுகத் துறை அதிகாரிகள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
 தேக்கடி ஏரியில் கேரள சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான 5 படகுகளும், கேரள வனத்துறைக்கு சொந்தமான 5 படகுகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் 111 அடியாக நீர்மட்டம் குறைந்ததால் ஒரே நேரத்தில் 100 சுற்றுலா பயணிகள் பயணிக்கும் ஜலராஜா என்ற படகை இயக்க கேரள வனத்துறை தடை விதித்திருந்தது.
 மேலும் இப்படகை 1 கி.மீ. தூரம் தள்ளி நிறுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இதற்கிடையே தற்போது இப்படகை தொடர்ந்து இயக்கலாமா என கேரள வனத்துறையினர், கேரள துறைமுக அதிகாரிகளிடம் கேட்டிருந்தனர். இதையடுத்து கேரள மாநிலம் பரவூர் துறைமுகத்துறை உதவி கடலியல் அளவையாளர் மஞ்சு தாமோதரன் தலைமையில், தேக்கடி ஏரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. படகு நிறுத்தப் பகுதி மற்றும் படகு செல்லும் பாதையில் ஆய்வை கடந்த 2 நாள்களாக நடத்தி வருகின்றனர்.
படகை இயக்க தற்போதுள்ள நீர் இருப்பு போதுமானதாக இருக்குமா என்று ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
 மேலும் ஓரிரு நாள்களில் இதற்கான அறிக்கை வனத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், அதன் பின் படகு தொடர்ந்து இயக்கப்படுமா என்பது தெரிய வரும் என்றும் கேரள வனத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com