"நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரி சாலை மறியல்: தேனி மாவட்டத்தில் 401 பேர் கைது

மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனி மாவட்டத்தில் 11 இடங்களில்

மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனி மாவட்டத்தில் 11 இடங்களில் செவ்வாய்க்கிழமை முற்றுகை மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 108 பெண்கள் உள்பட 401 பேரை போலீஸார் கைது செய்தனர்.
       மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஏழை மாணவர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனி மாவட்டத்தில் 11 இடங்களில் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் முன் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
       தேனியில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் முல்லை முருகன் தலைமையில், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 76 பேரை போலீஸார் கைது செய்தனர்.  பழனிசெட்டிபட்டியில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு மாநிலக் குழு உறுப்பினர் திருமலைக்கொழுந்து தலைமையில், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
       போடியில், மாவட்டப் பொருளாளர் பெருமாள் தலைமையில் பாரத ஸ்டேட் வங்கி முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 37 பேர், சின்னமனூரில் மார்கையன்கோட்டை விலக்கு பகுதியில் உள்ள தபால் நிலையம் முன் ஒன்றியச் செயலர் கனகராஜ் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
       தொடர்ந்து, தேவாரம் தபால் நிலையம் முன், நகரச் செயலர் சுப்பிரமணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேர், ராயப்பன்பட்டியில் மாவட்டச் செயலர் தங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 67 பேர் கைது செய்யப்பட்டனர்.
     கம்பம் தபால் நிலையம் முன், நகரச் செயலர் கல்யாணசுந்தரம் தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர், கூடலூர் பாரத ஸ்டேட் வங்கி முன், நகரச் செயலர் ராமர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
         ஆண்டிபட்டியில் இந்தியன் வங்கி முன், மாவட்டக் குழு உறுப்பினர் பரமேஸ்வரன் தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர், மயிலாடும்பாறை  தபால் நிலையம் முன் ஒன்றியச் செயலர் குணசேகரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 22 பேர், பெரியகுளம் தென்கரையில் பாரத ஸ்டேட் வங்கி முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேர் என மொத்தம் 401 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com