தேனி மாவட்டத்தில் தினமணி சார்பில் இன்று அப்துல் கலாம் நினைவு அமைதி ஊர்வலம்

தேனி மாவட்டத்தில் தினமணி நாளிதழ் சார்பில் வியாழக்கிழமை (ஜூலை 27) 4 இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்புடன்

தேனி மாவட்டத்தில் தினமணி நாளிதழ் சார்பில் வியாழக்கிழமை (ஜூலை 27) 4 இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்புடன் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவு நாள் அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது.
தேனியில் தினமணி மற்றும் தேனி கம்மவார் சங்கம் கல்வி நிறுவனங்கள் சார்பில் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு அமைதி ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தொடக்கி வைக்கிறார். தேனி கம்மவார் சங்கத் தலைவர் எஸ்.நம்பெருமாள்,  பொதுச் செயலர் பி.பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கம்மவார் சங்க தொழில்நுட்பக் கல்லூரி, பாலிடெக்னிக், தொழிற் பயிற்சி நிலையம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். மதுரை சாலை, என்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வழியாக கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளி வரை ஊர்வலம் நடைபெறுகிறது.
போடியில் தினமணி மற்றும் ஜ.கா.நி.மேல்நிலைப் பள்ளி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது. பள்ளித் தலைவர் வடமலை ராஜையபாண்டியன் தலைமையில், பள்ளி வளாகத்தில் இருந்து காலை 9 மணிக்கு போடி வட்டாட்சியர் (பொறுப்பு) ஆர்.ரமேஷ்குமார் ஊர்வலத்தை தொடக்கி வைக்கிறார். நகராட்சி ஆணையர் எம்.சுவாமிநாதன், பள்ளிச் செயலர் எஸ்.ஐயப்பராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை, திருவள்ளுவர் சிலை, கட்டபொம்மன் சிலை சாலை வழியாக பள்ளி வளாகம் வரை ஊர்வலம் நடைபெறுகிறது.
உத்தமபாளையத்தில் தினமணி நாளிதழ் மற்றும் விகாசா வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆகியவற்றின் சார்பில் உத்தமபாளையம் புறவழிச் சாலையில் இருந்து காலை 9 மணிக்கு உத்தமபாளையம் பேரூராட்சி செயலர் அலுவலர் கோ.பாலசுப்பிரமணி ஊர்வலத்தை தொடக்கி வைக்கிறார். பள்ளித் தாளாளர் இந்திரா உதயக்குமார் முன்னிலை வகிக்கிறார். உத்தமபாளையம் பேருந்து நிலையம் வரை ஊர்வலம் நடைபெறுகிறது.
பெரியகுளம் வட்டாரம், சில்வார்பட்டியில் தினமணி நாளிதழ் மற்றும் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com