பெரியகுளம் அருகே குடிநீர் திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி முதல்நிலை பேரூராட்சியில் நடைபெறும் குடிநீர் திட்டப் பணிகளை, ஆட்சியர் நா. வெங்கடாலசம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி முதல்நிலை பேரூராட்சியில் நடைபெறும் குடிநீர் திட்டப் பணிகளை, ஆட்சியர் நா. வெங்கடாலசம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
        தேவதானப்பட்டி முதல்நிலை பேரூராட்சியில் ரூ 5.10 கோடி மதிப்பில் நடைபெறும் குடிநீர் திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் தெரிவித்ததாவது:        இப் பேரூராட்சியில் ஒருங்கிணைக்கப்பட்ட நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ்,  ரூ 1.20 கோடியும், உள்கட்டமைப்பு இடைவெளி பூர்த்தி நிதியின் கீழ் ரூ. 4.80 கோடி என மொத்தம் ரூ 5.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.    
இத்திட்டத்துக்காக, மஞ்சளாறு படுகையில் 3 திறந்தவெளிக் கிணறுகள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீரானது 3 லட்சம் மற்றும் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றப்பட்டு, குழாய்கள் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின் போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியச் செயற்பொறியாளர் முத்துபழனியப்பன், உதவிச் செயற்பொறியாளர் (பேரூராட்சி ) கருப்பையா , தேவதானப்பட்டி உதவிச் செயற்பொறியாளர் மாரியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com