தேவதானப்பட்டியில் போலீஸாரைக் கண்டு ஓடிய இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து சாவு: உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே வாகன தணிக்கையின் போது போலீஸாரைக் கண்டு ஒடிய இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே வாகன தணிக்கையின் போது போலீஸாரைக் கண்டு ஒடிய இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.தேவதானப்பட்டி காவல் சார்பு- ஆய்வாளர் அழகுராஜா சனிக்கிழமை மாலை மஞ்சளாறு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது வடக்குத்தெருவை சேர்ந்த ரவி என்பவரது மகன் அருண்பாண்டியன் (24) போலீஸாரைக் கண்டதும் ஓடினாராம். அப்போது அருகில் இருந்த கிணற்றில் அவர் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அருண்பாண்டியன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற தேவதானப்பட்டி போலீஸார், சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 இந்நிலையில் அவரது சாவுக்கு காரணமான காவல் சார்பு- ஆய்வாளர் அழகுராஜா மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை தேவதானப்பட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் தேனி- திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.
 இச்சம்பவம் குறித்து ஏடிஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்தவும், தேவதானப்பட்டி காவல் சார்பு- ஆய்வாளர் அழகுராஜாவை, மாவட்ட ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com