நியாயவிலை கடைகளுக்கு 374 டன் துவரம் பருப்பு ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு, 374 டன் துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு, 374 டன் துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியது: மாவட்டத்தில் உள்ள 519 நியாயவிலை கடைகளுக்கு 60 சதவிகித குடும்ப அட்டைகளுக்கு வழங்கும் விதத்தில் 374 டன் துவரம் பருப்பு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.  90 சதவிகிதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு  2,89,166 கிலோ பாமாயில் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நியாயவிலை கடைகளில் தற்போது 247 டன் கோதுமை இருப்பில் உள்ளது. மேலும் 1,600 டன் கோதுமை ஒதுக்கீடு பெறப்பட உள்ளது.
ஸ்மார்ட் கார்டு தயார்: மாவட்டத்தில் மொத்தம் 4,46,197 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், 3,83,809 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டு, 90 சதவிகிதம் அச்சிடப்பட்டு விட்டன.
ஸ்மார்ட் கார்டு பணிகள் காரணமாக, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பங்கள் பெறுதல், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மற்றும் கடை மாற்றம் ஆகிய பணிகள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com