கம்பம் பள்ளத்தாக்கில் மாற்று விவசாயத்தை நாடும் விவசாயிகள்: கருகும் தென்னை மரங்கள் வெட்டி அழிப்பு

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் வறட்சியால் கருகிய தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி அழித்து மாற்று விவசாயம் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் வறட்சியால் கருகிய தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி அழித்து மாற்று விவசாயம் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பொதுவாக கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியான கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, கே.கே.பட்டி மற்றும் ஓடைப்பட்டி பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. இங்கு விளைவிக்கப்படும் தேய்காய்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மேலும் காங்கேயம், திருப்பூர் பகுதியிலுள்ள கொப்பரை வியாபாரிகள் அதிகளவில் இப்பகுதி தோய்காய்களை விரும்பி வாங்கிச்செல்வதுண்டு. இந்நிலையில் கம்பம் பள்ளத்தாக்கில் வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் தென்னை மரங்கள் கருகி வருகின்றன.
விளைச்சல் குறைவு காராணமாக விவசாயிகள் தென்னை மரங்களை அழித்து மாற்று விவசாயத்தில் இறங்கியுள்ளனர். நெடுஞ்சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளிலுள்ள தோப்புகளை குடியிருப்புகளாக மாற்றும் பணியும் நடைபெறுகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கேரள வாடல் நோய் காரணமாக தென்னை மரங்களில் விளைச்சல் குறைந்துவிட்டது. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பருவமழை பொய்த்து வருவதால் தென்னை விவசாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது சின்னமனூர், உத்தமபாளையம், கோம்பை போன்ற பகுதியில் அதிகளவில் கருகிவிட்ட தென்னந்தேப்புகளை விவசாயிகள் அழிக்கத்தொடங்கிவிட்டனர்.
பருவமழை தொடர்ந்து பொய்த்து வந்தால் கம்பம் பள்ளத்தாக்கில் தென்னை விவசாயம் முற்றிலுமாக பாதிக்கும் நிலை ஏற்பட்ட வாய்ப்புள்ளது என்றனர். எனவே மழை பொழிவுக்கு தேவையான மரங்களை அதிகளவில் வளர்ந்து, ஆக்கிரமிப்புள்ள குளங்கள், கண்மாய்களை மீட்டு மழைநீரை தேக்கி விவசாயத்தை காக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com