தேனியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு: 7 பேருந்துகளின் உரிமம் ரத்து

தேனியில் சனிக்கிழமை பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 7 பேருந்துகளின் புதுப்பித்தல் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

தேனியில் சனிக்கிழமை பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 7 பேருந்துகளின் புதுப்பித்தல் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
தேனி மாவட்ட காவல் துறை ஆயுதப் படை மைதானத்தில் போக்குவரத்துத் துறை, வருவாய்த் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி வாகனங்கள் குறித்து ஒருங்கிணைந்த ஆய்வு நடைபெற்றது. பள்ளிப் பேருந்துகள் மற்றும் வேன்களின் கட்டமைப்பு, செயல்திறன், கட்டுப்பாடு, அவசர வழி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு உபகரணம், வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடைபெற்றது. மொத்தம் 629 வாகனங்களை ஆய்வு செய்யப்பட்டதில், 41 பேருந்துகள் மற்றும் வேன்களில் சிறிய குறைபாடுகளை கண்டறிந்து மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. தரம் குறைவாக உள்ள 7 பேருந்துகளின் புதுப்பித்தல் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக்முகமது ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com