சின்னமனூரில் வேளாண்மை அதிகாரி விவசாயிகளுடன் ஆலோசனை

சின்னமனூரில் வேளா ண்மை துறை ஒழுங்குமுறை ஆணையர் விவசாயிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

சின்னமனூரில் வேளா ண்மை துறை ஒழுங்குமுறை ஆணையர் விவசாயிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
 தேனி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் சின்னமனூரில் காய்கறிகள், பழங்களுக்கான குளிர்பதன தொடர் சங்கிலி மேலாண்மைத் திட்டம் குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வேளாண்மைதுறை ஒழுங்குமுறை ஆணையர் சிரு தலைமை வகித்து பேசியதாவது:
விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்வதில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
 இதனை சரிசெய்யும் வகையில் தமிழகத்தில் 20 மாவட்டங்களை தேர்வு செய்து, அங்குள்ள வேளாண்மை மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலேயே நபார்டு வங்கி உதவியுடன் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான குளிர்பதன தொடர் சங்கிலி மேலாண்மைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் தேனி மாவட்டதில் சின்னமனூர், தேனி மற்றும் கம்பம் பகுதியில் அமைக்கப்படும் மையத்துக்கு ரூ.7.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  
இம்மையம் மூலமாக விவசாயிகளிடம் நேரடியாக காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி வந்து சேமித்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொடுக்கப்படும் என்றார்.
 இக்கூட்டத்தில் மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் அழகுநாகேந்திரன், ஒழுங்கு முறை விற்பனை செயலர் பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com