தேனி மாவட்டத்தில் வாக்காளர் விவரம் சேகரிப்பு

தேனி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை  (நவ.14) முதல் நவ.30 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் சார்பில் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவரம் சேகரிக்கும் பணி நடைபெறுகிறது.

தேனி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை  (நவ.14) முதல் நவ.30 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் சார்பில் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவரம் சேகரிக்கும் பணி நடைபெறுகிறது.
மாவட்டத்துக்கு உள்பட ஆண்டிபட்டி, பெரிகுளம், போடி மற்றும் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட 1,177 வாக்குச் சாவடிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் குழுவினர் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவரங்களை சேகரிக்கின்றனர்.
குடும்பத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, முகவரி மாறி குடியிருக்கும் வாக்காளர்கள், வரும் 2019, ஜன.1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்று வெளிநாடுகளில் வசித்து வருவோர், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள், வாக்குச் சாவடியில் உள்ள அடிப்படை வசதிகள், சேதமடைந்த நிலையில் உள்ள வாக்குச் சாவடிகள், வாக்குச்சாவடி அருகே உள்ள அஞ்சல் நிலையம் ஆகிய விபரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com