போடியில் டெங்கு தடுப்பு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

போடியில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து, தேனி மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

போடியில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து, தேனி மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
       போடி நகராட்சியில் 33 வார்டுகளிலும் நகராட்சி சார்பில் டெங்கு தடுப்புக்கான கொசு மருந்து தெளித்தல், புகை அடித்தல், கொசு புழுக்கள் உற்பத்தியாவதை தடுத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் முன்னேற்றம் உள்ளதா, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து, ஆட்சியர் ந. வெங்கடாசலம் ஆய்வு மேற்கொண்டார்.
     செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு போடி வந்த ஆட்சியர்,  போடி நகராட்சி 20 ஆவது வார்டு தென்றல் நகரில் ஆய்வு செய்தார்.
 வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்த அவர், தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் தேங்கும் பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அவர், பொதுமக்களையும் சந்தித்து, டெங்கு தடுப்பு பணிகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும்  என அறிவுறுத்தினார்.  
   தென்றல் நகரில் உள்ள ஆவின் நிறுவனத்துக்குச் சொந்தமான பால் பண்ணையிலும் ஆய்வு செய்த ஆட்சியர், பின்னர் நகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து டெங்கு தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும், ஆய்வு செய்யும்போது மட்டும் தீவிரம் காட்டக்கூடாது என அறிவுறுத்தினார்.
    இந்த ஆய்வின்போது, போடி வட்டாட்சியர் ராணி, துணை வட்டாட்சியர்கள் சேகர், குமார், நகராட்சி ஆணையர் சுவாமிநாதன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடன் சென்றிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com