பெரியகுளம் பெண்கள் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி திருவிழா புதன்கிழமை தொடங்கியது. இந்த கண்காட்சி வெள்ளிக்கிழமை (அக். 6) வரை நடைபெறுகிறது.

பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி திருவிழா புதன்கிழமை தொடங்கியது. இந்த கண்காட்சி வெள்ளிக்கிழமை (அக். 6) வரை நடைபெறுகிறது.
இக்கண்காட்சியை கல்லூரி முதல்வர் தி.நிர்மலா தலைமை வகித்து தொடக்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் மற்றும் நூலகர் பாத்திமா மேரி சில்வியா ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் ஆத்மார்த்தி கலந்து கொண்டு, வாசிப்போம் வாழ்வை வளப்படுத்துவோம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் தாமரைக்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.  தூய்மை இயக்கம் சார்பில் நடைபெற்ற பேச்சு,  கட்டுரை,  ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் ஏராளமான மாணவிகள் பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் சென்றனர். உதவி நூலகர் அற்புத சகாய மேரி நன்றி கூறினார்.  புத்தகக் கண்காட்சி திருவிழாவில் தேனி,திண்டுக்கல், மதுரை பகுதிகளை சேர்ந்த பதிப்பகத்தார் தங்களது புத்தகங்களை இடம் பெறச் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com