சுற்றுப்புற சுகாதாரத்தை பராமரித்தால் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்தலாம்: ஆட்சியர்

பொதுமக்கள் சுற்றுப்புற சுகாதாரத்தை பராமரித்து, அரசு அலுவலர்களின் டெங்கு ஒழிப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால் மாவட்டத்தில்

பொதுமக்கள் சுற்றுப்புற சுகாதாரத்தை பராமரித்து, அரசு அலுவலர்களின் டெங்கு ஒழிப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால் மாவட்டத்தில் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார்.
 பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சியில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் அவர் கூறியதாவது:
 தலைவலி, தசைவலி, கண்வலி, உடல்அரிப்பு, மூட்டு வலி மற்றும் வாந்தி ஆகியவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும். இவை இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை பொதுமக்கள் அணுகி  1 வாரம்  சிகிச்சை பெற்றால் முழு குணமடைந்து விடலாம். சாதாரண காய்ச்சல் நீடித்தால் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலமே டெங்கு காய்ச்சலை உறுதி செய்ய முடியும்.
 பொதுமக்கள் தண்ணீரை தொட்டிகளிலோ அல்லது பாத்திரங்களிலோ சேமித்து வைக்கக் கூடாது. சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரை நன்கு மூடி பாதுகாக்க வேண்டும். தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள் , டயர்,  தேங்காய் ஓடுகள்,  உடைந்த மண்பாண்டங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள  அரசு அலுவலர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்றார்.
 ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் வடிவேல், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் இரா.ஆனந்தி,  வட்டார வளரச்சி அலுவலர் ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com