தேனியில் அண்ணா பிறந்தநாள் போட்டிகள்: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற கவிதை, கட்டுரை

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் ந.வெங்கடாசலம் பரிசுகள் வழங்கினார்.
கவிதைப் போட்டியில் கோட்டூர், மதுரை காமராஜர் பல்கலைக் கழக கல்லூரி மாணவர் கருப்பசாமி முதலிடம் வென்றார். குள்ளப்புரம் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவி பொன்.அழகம்மை 2-ஆம் இடமும், தேனி கம்மவார் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேது 2-ஆம் இடமும் வென்றனர்.
கட்டுரைப் போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி மகேஸ்வரி, ஸ்ரீவி.பி.ஆர். கல்வியியல் கல்லூரி மாணவி பிரியதர்ஷினி, குள்ளப்புரம் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவி காவியா ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை வென்றனர்.
பேச்சுப் போட்டியில், தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ராகவி முதலிடமும், பெரியகுளம் அரசு தோட்டக் கலை கல்லூரி மாணவர் குப்புசாமி 2-ஆம் இடமும், பெரியகுளம் மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி நிவேதா 3-ஆம் இடமும் வென்றனர்.
ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் வென்றவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், 2-ஆம் இடம் வென்றவர்களுக்கு தலா ரூ.7,000, 3-ஆம் இடம் வென்றவர்களுக்கு தலா ரூ.5,000 ரொக்கப் பரிசை ஆட்சியர் வழங்கினார்.
அப்போது, இந்தப் போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவர் என்று ஆட்சியர் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், சென்னை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரக அலுவலக கண்காணிப்பாளர் இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com