தேனியில் 'ஜாக்டோ-ஜியோ' அமைப்பினர் கைதாகி விடுதலை: பிற்பகலில் பணிக்குத் திரும்பினர்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 650 பேரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8-ஆவது ஊதியக் குழு ஊதிய பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்.7-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கோரிக்கைளை வலியுறுத்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3-ஆவது நாளாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 650 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை பிற்பகல் 12.30 மணிக்கு தேனி காவல் கண்காணிப்பாளர் சேது தலைமையில் போலீஸார் கைது செய்து, தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களுக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, நீதிமன்ற உத்தரவின்படி போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீஸார் விடுவித்தனர். பின்னர், பிற்பகல் 2 மணிக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு மைய ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com