வருசநாடு வனச்சரகத்தில் பணியாளர்களை தோட்ட வேலைக்கு பயன்படுத்துவதாக புகார்

வருசநாடு வனச்சரகத்தில் பணியாளர்களை தோட்ட வேலைக்கு பயன்படுத்துவதால், வனப்பகுதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என வன ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வருசநாடு வனச்சரகத்தில் பணியாளர்களை தோட்ட வேலைக்கு பயன்படுத்துவதால், வனப்பகுதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என வன ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வருசநாடு வனச்சரகத்தில் பஞ்சந்தாங்கி வடக்கு, தெற்கு பிட், மஞ்சனூத்து வடக்கு , தெற்கு பிட், அரசரடி, உடங்கல், சந்தனக்காவு என 10 பிட் உள்ளது. இது மொத்தம் 12,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இப்பகுதியில் விலை உயர்ந்த மரங்கள் மற்றும் சிங்கவால் குரங்கு, யானை, மான், புலி, சிறுத்தை, காட்டுமாடு உள்பட பல்வேறு அரிய வகை வன விலங்குகள் உள்ளன.
அதிக பரப்பளவுள்ள இந்த வனப்பகுதியில் 1 வனச்சரக அலுவலர், 1 ஓட்டுநர், 2 வனவர் மற்றும் 2 வேட்டைத் தடுப்பு காவலர் உள்பட மொத்தம் 15 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இந்நிலையில் வருசநாடு வனச்சரக பணியாளர்களை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதாக வன ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, பொதுவாக வனப்பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்து, அதை பாதுகாக்க அரசு தனியாக பணம் வழங்கி வருகிறது. இந்நிலையில் வனத்தை பாதுகாக்க வேண்டிய வனத்துறை பணியாளர்களை நர்சரியில் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் தெளிக்க பயன்படுத்துகின்றனர்.
இதனிடையே வருசநாடு வனப்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் மஞ்சனூத்து பகுதியில் 10 ஏக்கர் அளவுக்கு வனத்தை அழித்து விவசாயம் செய்துள்ளனர். அதே போல் பஞ்சந்தாங்கி பகுதியில் அரிய வகை மரங்களை வெட்டிக் கடத்தியுள்ளனர்.
இதுவரை இவர்கள் மீது வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தெரியவில்லை. மேலும் வனப் பணியாளர்களை தோட்ட வேலைக்கு பயன்படுத்தி வருவதால் வனத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com