கல்லூரியில் வரிச்சீரமைப்பு கருத்தரங்கம்

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் வியாழக்கிழமை இந்தியாவில் வரி சீரமைப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் வியாழக்கிழமை இந்தியாவில் வரி சீரமைப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
வணிகவியல் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் எம்.மனோகரன் தலைமை வகித்தார். மதுரை விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் கே.கார்த்திகேயன் பங்கேற்று இந்தியாவில் ஆரம்ப கால வரி விதிப்பு முறைகள் தொடங்கி தற்போதைய ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு வரை விரிவாக விளக்கமளித்தார்.
கருத்தரங்கில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 10 கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது மாணவர்கள் வரி சீரமைப்பு குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்தனர். சிறந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன.
இதில் இந்தியாவில் வரி சீரமைப்பு குறித்த மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் கொண்ட தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. அதனை கல்லூரி சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுரேஸ்குமார் பெற்றுக் கொண்டார். க
ருத்தரங்க ஏற்பாடுகளை வணிகவியல் துறை சுயநிதிப் பிரிவு துறை தலைவர் என்.விஜய் ஆனந்த் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com