தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க செப். 19 முதல் சிறப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு செப். 19-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை சிறப்பு

தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு செப். 19-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும், ஒரே மாதிரியான தேசிய அடையாள வழங்குவதற்கு பதிவுகள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
பெரியகுளம் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களுக்கு செப்.19-ஆம் தேதி தாமரைக்குளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி வளாகத்தில் உள்ள சர்வோதீப் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியிலும், போடி ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களுக்கு செப். 20-ஆம் தேதி போ.தர்மத்துப்பட்டி பாலமுருகன் மன வளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியிலும், ஆண்டிபட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களுக்கு செப்.21-ஆம் தேதி ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.
சின்னமனூர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களுக்கு செப்.22-ஆம் தேதி சின்னமனூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், கம்பம் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களுக்கு செப்.23-ஆம் தேதி உத்தமபுரம் அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியிலும், உத்தமபாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களுக்கு செப்.25-ஆம் தேதி உத்தமபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தேனி ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களுக்கு செப்.26-ஆம் தேதி தேனி பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், க.மயிலை ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களுக்கு செப்.27-ஆம் தேதி கரட்டுப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.
இந்த முகாமிற்கு மாற்றுத் திறனாளிகள் நேரடியாக வரத் தேவையில்லை. மாற்றுத் திறனாளியின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் முகாமில் கலந்து கொண்டு, சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளியின் அடையாள அட்டை, மார்பளவு புகைப்படம், வெள்ளைத் தாளில் பெறப்பட்ட மாற்றுத் திறனாளியின் கையொப்பம் அல்லது இடது கை பெருவிரல் ரேகைப் பதிவு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுள் ஒன்றின் நகல், ஜாதிச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து ஒரே மாதிரியான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம்.
மாற்றுத் திறனுடைய பள்ளிக் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர்களிடம் ஒரே மாதிரியான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com