போடி கண்மாய் உடைக்கப்பட்டதாக புகார்: அதிகாரிகள் ஆய்வு

போடி பங்காருசாமி நாயக்கன் கண்மாய் உடைக்கப்பட்டதாக வந்த புகாரையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

போடி பங்காருசாமி நாயக்கன் கண்மாய் உடைக்கப்பட்டதாக வந்த புகாரையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
 சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் இக்கண்மாய் தூர்வாரப்படாத நிலையில் மண் மேடாகவும்,  சீமைக் கருவேல மரங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. மேலும் அதன் ஒரு பகுதி சிலரின் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் இக்கண்மாயில் நீர் நிரம்பியது.
 இந்நிலையில் திங்கள்கிழமை கண்மாய் முழுவதும் நீர் நிரம்பியிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பெரும் பகுதி வற்றி காணப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் அங்கு சென்று பார்த்த போது கண்மாயின் கிழக்கு பகுதியில் உடைப்பு ஏற்பட்டிருந்தது.  இதைத் தொடர்ந்து கண்மாயை ஆக்கிரமிப்பு செய்துள்ள யாராவது உடைத்திருப்பார்களோ என சந்தேகமடைந்த விவசாயிகள் இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போடி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தினேஷ் தலைமையில் அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தனர். கண்மாயை நீண்ட காலம் பராமரிக்காததால் கதவணை பகுதியில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி இருந்தது தெரிந்தது. இதனையடுத்து கண்மாயை மராமத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com