கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நாற்றங்கால் அமைக்கும் பணி தீவிரம்

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் நாற்றங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் நாற்றங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளான உத்தமபாளையம் தாலுகாவில் 11, 807 ஏக்கர், போடி தாலுகாவில் 488 ஏக்கர், தேனி தாலுகாவில் 2,412 ஏக்கர் என மொத்தம் 14, 707 ஏக்கர் நன்செய் பாசன நிலங்கள் உள்ளன. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திங்கள்கிழமை (செப். 25) முதல் இப்பகுதிகளின் முதல் போக சாகுபடிக்கு முல்லை பெரியாறு அணையிலிருந்து, தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக பாசனத்திற்கான தண்ணீரை எதிர்பார்க்கும் விவசாயிகள், தங்கள் நிலங்களில் நாற்றங்கால்கள் அமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சனிக்கிழமை (செப். 23) அணைகளின் நீர்மட்ட விவரம்:
முல்லைப் பெரியாறு அணை: நீர் மட்டம் - 127.40 அடி, நீர் இருப்பு- 4,136 மில்லியன் கன அடி. நீர் வரத்து- 908 கன அடி, நீர் வெளியேற்றம் - 1,400 கன அடி.
வைகை அணை: நீர் மட்டம்- 41.57 அடி, நீர் இருப்பு- 1,078 மில்லியன் கன அடி. நீர் வரத்து- 1,025 கன அடி, நீர் வெளியேற்றம்- 40 கன அடி.
சோத்துப்பாறை அணை: நீர் மட்டம்- 126.34 அடி, நீர் இருப்பு- 100.11 மில்லியன் கன அடி. நீர் வரத்து- 15 கன அடி, நீர் வெளியேற்றம்- 15 கன அடி.
மஞ்சளாறு அணை: நீர் மட்டம்- 54 அடி, நீர் இருப்பு- 435.32 மில்லியன் கன அடி. நீர் வரத்து- 46 கன அடி, நீர் வெளியேற்றம் - 46 கன அடி.
சண்முகாநதி அணை: நீர் மட்டம் - 20.95 அடி, நீர் இருப்பு - 08.03 மில்லியன் கன அடி. நீர் வரத்து- இல்லை, நீர் வெளியேற்றம்- இல்லை.
பெரியாறு அணை மற்றும் தேனி மாவட்டத்தில் மழை இல்லை. குமுளி- தேக்கடியில் மட்டும் 0.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com