தேனியில் அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடக்கம்

தேனி மாவட்ட மைய நூலகத்தில் சனிக்கிழமை பள்ளிக் கல்வித் துறை பொது நூலக இயக்ககம் சார்பில் அரசுப் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை ஆட்சியர் ந.வெங்கடாசலம் தொடக்கி வைத்தார்.

தேனி மாவட்ட மைய நூலகத்தில் சனிக்கிழமை பள்ளிக் கல்வித் துறை பொது நூலக இயக்ககம் சார்பில் அரசுப் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை ஆட்சியர் ந.வெங்கடாசலம் தொடக்கி வைத்தார்.
மாவட்ட நூலக அலுவலர் மா.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தேனி வாசகர் வட்ட தலைவர் கள்ளிப்பட்டி குப்புசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட மைய நூலகர் லட்சுமணப்பெருமாள் வரவேற்றார்.
பயிற்சி மையத்தை தொடக்கி வைத்து ஆட்சியர் பேசியதாவது: இந்த இலவச பயிற்சி மையத்தில், அரசு போட்டித் தேர்வுகள் அனைத்திற்கும் தகுதி வாய்ந்த வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். பயிற்சி பெறுவோருக்கு போட்டித் தேர்வு வழிகாட்டி வழங்கப்படும். 2017-18-ஆம் கல்வி ஆண்டில் மெதத்தம் 144 நாள்கள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பில் இதுவரை 48 பேர் சேர்ந்துள்ளனர்.
மேலும் சேர விரும்புவோர் மாவட்ட மைய நூலக அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மாவட்டத்தில் அரசு போட்டித் தேர்வு எழுதுவதற்கு தயாராகி வருவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். நூலகர் மாலதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com