"தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்து, 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலைக்காக காத்திருப்போர், அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்து, 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலைக்காக காத்திருப்போர், அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்து, 31.3.2018-ஆம் தேதியன்று 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தின் கீழ், 10-ஆம் வகுப்பு தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்துள்ளவர்களுக்கு ரூ.600, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி கல்வித் தகுதியை பதிவு செய்துள்ளவர்களுக்கு ரூ.900, பிளஸ் 2 தேர்ச்சியை பதிவு செய்துள்ளவர்களுக்கு ரூ.1,200, இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பை பதிவு செய்துள்ளவர்களுக்கு ரூ.1,800 வீதம் 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 3 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் கீழ் உள்ள கல்வித் தகுதியை பதிவு செய்துள்ளவர்களுக்கு ரூ.1,800, பிளஸ் 2 தேர்ச்சி தகுதியை பதிவு செய்துள்ளவர்களுக்கு ரூ.2,250, பட்டப் படிப்புக்கு ரூ.3,000 வீதம் 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்.
தகுதிகள்: 31.3.2018-ஆம் தேதி ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கும், இதர வகுப்பினர் 40 வயதுக்கும் உள்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை.
பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் மற்றும் தொழிற் கல்வி பட்டதாரிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கக் கூடாது. தகுதியுள்ளவர்கள் தங்களது கல்வித் தகுதிச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை ஆகியவற்றுடன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொண்டு, உரிய படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்.
ஏற்கெனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்கு மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுடன், ஆதார் அட்டை எண்ணை இணைத்து பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com