கம்பம், பெரியகுளம் பகுதி சிவன் கோயில்களில் மஹா சிவராத்திரி திருவிழா

கம்பம் மற்றும் பெரியகுளம் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் மஹா சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றன.

கம்பம் மற்றும் பெரியகுளம் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் மஹா சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றன.
 தேனி மாவட்டம் கம்பம்  காசிவிசுவநாதர் கோயிலில் மஹாசிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் விடிய விடிய நடைபெற்றன. முதல்நாள் இரவு நடைபெற்ற பூஜைகளில் ஆயிரத்துக்கும் மேலான  பக்தர்கள் கலந்து கொண்டனர். அதே போல் கம்பம் வனச்சரகர் அலுவலக சாலையில் உள்ள ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள் கோயில் மற்றும் ஸ்ரீகண்ணுடையார் சுவாமி கோயிலில் மஹாசிவராத்திரி திருவிழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
 கம்பம் அருகே சுருளி அருவியில் உள்ள ஸ்ரீஆதி அண்ணாமலையார் மஹாமேரு கோயில் மற்றும் ஸ்ரீகோடிசிவலிங்கம் கோயில்களில் சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. 
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில்  செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதே போல் பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 
ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் திம்மரசநாயக்கனூரில் உள்ள தர்மசாஸ்தா கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும்  மாவூற்று வேலப்பர்கோயிலில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com