லோயர் கேம்ப்பிலிருந்து மதுரைக்கு குடிநீர்: அதிகாரிகள் ஆய்வு: விவசாயிகள் எதிர்ப்பு

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்ல மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்ததற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்ல மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்ததற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
     மதுரை மாநகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் வைகை அணையிலிருந்து திறந்து விடப்படுகிறது. கோடைகாலங்களில் வைகை அணை வறண்டு விடுவதால், தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
    அதன்பேரில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ரூ.1,200 கோடி மதிப்பில் லோயர் கேம்ப்பிலிருந்து-மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை அறிவித்தார்.
    அதன் முதல் கட்டமாக, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு வந்து, தேனி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் வழங்கும் முறைகளைஆய்வு செய்தனர். வெள்ளிக்கிழமை இரண்டாம் கட்டமாக, லோயர் கேம்ப்பில் உள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டச் செயல்பாடுகளை பார்வையிடுவதற்காக, நகராட்சிகளின் இயக்குநர்  பிரகாஷ், மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர், மாநகராட்சிப் பொறியாளர் ஏ. மதுரம் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளின் ஆணையர்கள், பொறியாளர்கள் வந்திருந்தனர். 
     அதிகாரிகள் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தபோது, கூடலூரைச் சேர்ந்த விவசாயிகள் ராஜீவ், செந்தில், கொடியரசன் உள்ளிட்டோர் மதுரைக்கு குடிநீரை குழாய் மூலம் கொண்டு செல்வதை விடுத்து, ஆற்றின் வழியே வைகை அணை வரை கொண்டு சென்றால் நிலத்தடி நீர் ஏற்படும் என்றனர். இது குறித்து பரிசீலிப்பதாக அதிகாரிகள் விவசாயிகளிடம் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com