கல்லூரியில் குழந்தைகள் பிரச்னை குறித்த கருத்தரங்கம்

போடியில் குழந்தைகள் பிரச்னை குறித்த கருத்தரங்கம், ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

போடியில் குழந்தைகள் பிரச்னை குறித்த கருத்தரங்கம், ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேனி சைல்டு-லைன் 1098 அமைப்பு மற்றும் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து, கல்லூரி மாணவ- மாணவியருக்கான சைல்டு-லைன் விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் பிரச்னைகள் குறித்த கருத்தரங்கை நடத்தின.    கல்லூரியின் புதிய கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆர். பாண்டி தலைமை வகித்தார். தேனி சைல்டு-லைன் அமைப்பின் இயக்குநர் எஸ். முகமது சேக் இப்ராஹிம் சிறப்புரையாற்றினார்.    சைல்டு-லைன் களப்பணிகள் குறித்து அவ்வமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மஞ்சு விளக்கினார். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.     முன்னதாக, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் உதவிப் பேராசிரியர் சுபலட்சுமி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் ஹேமா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com