ஒட்டன்சத்திரம் பூசணிக்காய்கள் ஒடிசாவுக்கு விற்பனை

ஒட்டன்சத்திரம் பகுதியில் விளையும் பூசணிக்காய்கள் ஒடிசா மாநிலத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

ஒட்டன்சத்திரம் பகுதியில் விளையும் பூசணிக்காய்கள் ஒடிசா மாநிலத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
ஒட்டன்சத்திரத்தைச் சுற்றியுள்ள காவேரியம்மாபட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம்,சத்திரப்பட்டி,விருப்பாச்சி மற்றும் வேடசந்தூர், வடமதுரை, அய்யலூர், எரியோடு உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு பூசணிக்காய் மற்றும் அர்ஜூனா பூசணிக்காய் அதிக அளவு பயிர் செய்யப்படுகிறது.இந்த வகை பூசணிக்காய்கள் மானாவாரியமாகவும், தண்ணீர் பாய்ச்சல் மூலமாகவும் விளைவிக்கப்படுகிறது.இவை அதிக நாள்கள் கெடாமல் இருப்பதால் அவற்றை இருப்பு வைத்துக் கொள்ள முடியும். மேலும் இந்த காய்கள் நல்ல சுவையாக இருப்பதால் வட மாநிலங்களில் இவற்றிற்கு அதிக வரவேற்பு உள்ளது.
இதனால் ஒட்டன்சத்திரத்தில் இருந்து தினசரி 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஒடிசா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. ஒரு சில வியாபாரிகள் விவசாயிகளின் தோட்டத்திற்கே சென்று பூசணிக்காய்களை கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு கிலோ நாட்டுப்பூசணிக்காய் ரூ.3-க்கும், அர்ஜூனா பூசணிக்காய் ரூ.3.50-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் தற்போது ஒடிசா மாநிலத்திற்கு அதிக அளவு அனுப்பப்படுவதால் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது.வெள்ளிக்கிழமை ஒரு கிலோ நாட்டுப்பூசணிக்காய் ரூ.4.50-க்கும், அர்ஜூனா பூசணிக்காய் ரூ.4-க்கும் விற்பனையானது. இதனால் பூசணிக்காய் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com