கேட்பாரற்றுக் கிடந்த 40 கிலோ கஞ்சா பறிமுதல்

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேட்பாரற்று கிடந்த 40 கிலோ எடையுள்ள கஞ்சா பைகைளை திங்கள்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேட்பாரற்று கிடந்த 40 கிலோ எடையுள்ள கஞ்சா பைகைளை திங்கள்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கூடலூர்-கம்பம் சாலை, செல்வபுரம் விலக்கு பகுதியில் கஞ்சா பைகள் கேட்பாரற்று கிடப்பதாக கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சார்பு ஆய்வாளர் திவான் மைதீன் தலைமையில் போலீஸார் அங்கு சென்று பார்த்த போது, 20 பைகளில் தலா 2 கிலோ வீதம் மொத்தம் 40 கிலோ எடையுள்ள கஞ்சா கிடப்பது தெரிய வந்துள்ளது.  அவற்றை போலீஸார் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இருவர் கைது: கம்பம், உத்தமபுரம்-கோம்பை சாலையில் நாககாளியம்மன் கோயில் அருகே அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி(42), பாண்டியன்(54) ஆகியோரிடம் போலீஸார் 5 கிலோ கஞ்சாவை  திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com