அணையில் நீர்வரத்து அதிகரிப்பு: லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தி உயர்வு

முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து விநாடிக்கு 1,400 கன அடியாக இருந்ததைத் தொடர்ந்து, லோயர் கேம்ப்பில் 3 மின்னாக்கிகள் மூலம் 126 மெகா வாட்டாக மின் உற்பத்தி உயர்ந்துள்ளது. 

முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து விநாடிக்கு 1,400 கன அடியாக இருந்ததைத் தொடர்ந்து, லோயர் கேம்ப்பில் 3 மின்னாக்கிகள் மூலம் 126 மெகா வாட்டாக மின் உற்பத்தி உயர்ந்துள்ளது. 
    தொடர்ந்து ஒரு வார காலமாக கேரளம் மற்றும் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்தது.
     வியாழக்கிழமை நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.70 ஆக இருந்தது.  அணையில் நீர் இருப்பு 3,985 மில்லியன் கன அடி. நீர்வரத்து விநாடிக்கு 2,908 கன அடியாக இருந்தது. 
விநாடிக்கு 1,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டதால், லோயர் கேம்ப்பில் மின் உற்பத்தி செய்ய 3 மின்னாக்கிகள் இயக்கப்பட்டன. மின்னாக்கிக்கு தலா 42 மெகா வாட் என மொத்தம் 126 மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகிறது. 
     இதில், புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட மின்னாக்கி ஒரு நாள் மட்டும் முழு அளவான 42 மெகா வாட் மின் உற்பத்தி செய்தது. தற்போது, அது  நிறுத்தி வைக்கப்பட்டு பழைய 3 மின்னாக்கிகள் மட்டுமே இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தேக்கடியில் படகுகள் மீண்டும் இயக்கம்: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, தேக்கடி ஏரியில் கடந்த  திங்கள்கிழமை முதல் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கான 11 படகுகளும் இயக்கப்படவில்லை. 
இந்நிலையில், புதன்கிழமை மழை குறைந்ததால், தேக்கடியில் படகு போக்குவரத்து மீண்டும் தொடங்க்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com