நிதி நிறுவன உரிமையாளர் தவறவிட்ட பணப் பையை  காவல் நிலையத்தில் கூலி தொழிலாளி ஒப்படைப்பு

தேனி நகராட்சி காமராஜர் பேருந்து நிலையம் அருகே நிதி நிறுவன உரிமையாளர் தவறவிட்ட பணம் மற்றும் ஏ.டி.எம். அட்டை வைத்திருந்த  

தேனி நகராட்சி காமராஜர் பேருந்து நிலையம் அருகே நிதி நிறுவன உரிமையாளர் தவறவிட்ட பணம் மற்றும் ஏ.டி.எம். அட்டை வைத்திருந்த  கைப் பையை, கூலி தொழிலாளி புதன்கிழமை இரவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
தேனி கண்ணாத்தாள் கோயில் தெருவைச் சேர்ந்த சமையல் வேலை செய்யும் கூலி தொழிலாளி சீனிவாசன் (34). இவர், தேனி நகராட்சி காமராஜர் பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுரை சாலையில் கைப் பை ஒன்றை கண்டெடுத்துள்ளார். அதில்,  ரூ.3,300 பணம், ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். அட்டை மற்றும் சில காதிதங்கள் இருந்துள்ளன.
    கைப் பையை தேடி யாரும் வராததால், சீனிவாசன் அதை தேனி காவல் நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார். கைப் பையில் இருந்த காகிதத்தில் குறித்து வைக்கப்பட்டிருந்த செல்லிடப்பேசி எண்ணில் போலீஸார் தொடர்புகொண்டு விசாரித்ததில், அது தேனி என்.ஆர்.டி. நகரைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் செல்வன் (47) என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. உடனே, செல்வனை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தபோது, நகராட்சி காமராஜர் பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்வதற்கு பேருந்தில் ஏறும்போது கைப் பையை தவறவிட்டதாகக் கூறினார். அதையடுத்து, செல்வனிடம் கைப் பையை காவல் சார்பு-ஆய்வாளர் அசோக் ஒப்படைத்தார். 
சாலையில் கண்டெடுத்த பணம் மற்றும் ஏடிஎம் அட்டையுடன் கூடிய கைப் பையை, காவல் நிலையத்துக்கு வந்து ஒப்படைத்த சீனிவாசனுக்கு போலீஸார் பாராட்டுத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com