கம்பம் பகுதியில் கேரள குத்தல் அரிசி ரக நெல் சாகுபடி தொடக்கம்

கம்பம் பகுதியில் கேரள குத்தல் அரிசி எனப்படும் குறுகிய கால நெல் சாகுபடிக்கான பணிகள் தொடங்கி உள்ளன.

கம்பம் பகுதியில் கேரள குத்தல் அரிசி எனப்படும் குறுகிய கால நெல் சாகுபடிக்கான பணிகள் தொடங்கி உள்ளன.
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் நன்செய் விவசாயம் சம்பா, கோடை என இரண்டு போக சாகுபடிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, கோடைகால தொடக்கம் என்பதால், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 113.30 அடியாகக் குறைந்துள்ளது. 
முல்லைப் பெரியாற்றில் குடிநீர் தேவைக்கு மட்டும் 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நன்செய் வயல்களில் விவசாயப் பணிகள் நடைபெறாமல் நிலங்கள் தரிசாக உள்ளன. அதே நேரத்தில், முல்லைப் பெரியாற்றின் ஓரப் பகுதியில் உள்ள ஒரு சில நெல் வயல்களில் குறுகிய காலப் பயிரான கேரள குத்தல் அரிசி ரக நெற்பயிரை சாகுபடி செய்துள்ளனர். 
இது குறித்து உத்தமுத்து கால்வாய் கீழ்பகுதியைச் சேர்ந்த விவசாயி அய்யப்பன் கூறியது: கேரள குத்தல் அரிசி என்று சொல்லப்படும் ரகமான சிவப்பு மட்டை அரிசி பயிரிடப்பட்டுள்ளது. இது 75 நாள் பயிராகும். ஏப்ரல் மாத இறுதியில் அறுவடைக்கு தயாராகி விடும். 
இந்த நெல் பயிருக்கு தண்ணீர் தேவையில்லை. வறட்சியைத் தாங்கும் பயிராகும். விவசாயிகள் குறைந்த அளவே தற்போது இந்த ரக நெல் பயிரை சாகுபடி செய்துள்ளனர். வரும் காலங்களில் அதிகமானோர் பயன்படுத்தினால், கோடைக்கு முன்பே நெல் சாகுபடி செய்யலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com