தேவாரம் அருகே மக்கள் தொடர்பு முகாம்

தேவாரம் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.81.46 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தேவாரம் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.81.46 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இம்முகாமுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமை வகித்து விலையில்லா வீட்டுமனைப் பட்டா, ஆதரவற்ற விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, விலையில்லா தையல் இயந்திரங்கள், தேய்ப்பு பெட்டிகள் மற்றும் வேளாண்மைத் துறை சார்பில் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மாடு மற்றும் ஆட்டுக் கொட்டகை என 91 பயனாளிகளுக்கு 81 லட்சத்து 46 ஆயிரத்து 536 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். 
முகாமில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சி.தினேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.திலகவதி, மகளிர் திட்ட அலுவலர் எம்.கல்யாணசுந்தரம், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ராஜா, வட்டாட்சியர் உதயராணி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com