குச்சனூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

தேனி மாவட்டம், குச்சனூர் பேரூராட்சியில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி சனிக்கிழமை ஆய்வு செய்தார். 

தேனி மாவட்டம், குச்சனூர் பேரூராட்சியில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி சனிக்கிழமை ஆய்வு செய்தார். 
குச்சனூர் சனீஸ்வரர் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் குச்சனூர் ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத் தலமாக உள்ளது. இந்நிலையில், குச்சனூர் பேரூராட்சியிலுள்ள 15 வார்டுகளில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி சனிக்கிழமை திடீர் ஆய்வு செய்தார். அப்போது,  4, 5, 6 ஆவது வார்டுகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் சேமிப்பு பாத்திரங்கள் மற்றும் குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து, குச்சனூர் பிராதன சாலையில் கழிவுநீர் கால்வாய் செல்லும் பகுதியில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகிறதா, சாக்கடை புழுக்கள் உள்ளனவா என தீவிரமாக ஆய்வு செய்தார். தொடர்ந்து குடிநீரில் குளோரினேசன் அளவு மற்றும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் சுல்தான் மற்றும் பேரூராட்சி சுகாதாரப் பணியாளர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com